Listener comments

An Excellent program just ended.

I participated this week and was astonished by the depth of the discussion and the songs in ameerkalyani were melodious.

Jothi, Safiya, Sivaprakash, Venkatalakshmi Sakul Hameed and last but not the least Kalpana sang very well. Very well moderated by Kumaraguruparan. The explanations provided by Mammathu ayya were very apt and in-depth.

Nice and excellent service to “Thamizhisai”

Sundarakrishnan,
Madurai.
Oct 03, 2020


திரு.வைத்தியநாதன் அவர்களின் விளக்கம் மிக அருமை.
அவரது பேச்சை எழுத்துக்களில் பதிவிட்டால் இன்னும் எளிதாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள முடியும். நன்றி

திரு.மெய்ஞானி பிரபாகரபாபு,
பணி நிறைவு பெற்ற வங்கி மேலாளர், கவிஞர்.
குறுந்தொகை போன்ற நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
Sep 25, 2020


அமெரிக்கத் தமிழ் வானொலியின் கலை இலக்கிய நேரம் பண்ணிசை வளர்ச்சியில் இன்று (20-09-20)திருமதி கல்பனா, செல்வி சபியா ஆகியோர் தங்களுக்கே உரித்தான இனிய குரலில் அழகாக, அருமையாகப்பாடினார்கள்.
வயலின் வல்லுநர், தன்னடக்கத்தையே கொண்ட இசை மேதை திரு. வைத்தியநாதன் அய்யா பல அற்புதமான கருத்துக்களை மன நிறைவோடு வயலின் மூலம் வாரி வழங்கினார்கள்.
நாட்டியப்பேரொளி தேவி பெருமாள் அவர்கள் நாட்டியத்தில் அம்சாநந்தியின் பாங்கோடு பாடிக்காட்டினார்கள்.
செல்வி ஜோதி அவர்கள் இனிய குரலில் இனிமையாக பாடினார்கள்.
இன்றைய நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக எல்லோரும் ரசிக்கும் வண்ணமாக இருந்தது
இசை மேதை திரு. மம்மது அய்யா அவர்கள் இசைக் கலைஞர்களை தேடித் தேடி அழைத்து வந்து நிகழ்ச்சிகளை சிறக்க வைக்கிறார்கள். அய்யா அவர்களுக்கு இசை தான் உயிர்மூச்சு என்பதை நிறுபித்துக் காட்டி வருகிறார்கள். அய்யா அவர்களுக்கு தமிழ் இசை உலகம் நன்றிக் கடன்y பட்டுள்ளது.
தொகுப்பாளர் குமரகுருபரன், ஆறு அய்யா, கனகலட்சுமி அம்மா அவர்களுக்கு மீண்டும், மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

K. T. C. குருசாமி
Sattur, TN.
Sep 19, 2020


அமிர்தவர்சிணி – அருமை ஐயா, வணக்கம். முதல் முறையாக கேட்டேன் பாடல்கள் அத்தனையும் முத்தாக அமைந்திருந்தது எத்தனையோ சினிமா பாடல்களை பொருளில்லாமல் பாடுகிறோம் ஆனால் இதைப்போன்ற பொருள் பொதிந்த பாடல்கள் ஒரு தொகுப்பாக இதே யூட்யூபில் வந்தால் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் பாட முடியும் நன்றி ஐயா

Chandinibi prof.
Aligarh Muslim University
Sep 14, 2020


அய்யா வணக்கம்.

இன்று தாமதமாக சோட்டானிக்கரை அம்மனை அமிர்தவர்ஷினியாக பாடிக் கொண்டிருந்தபோது இணைந்தேன்.

மலையாளம் எனினும் அது தமிழிசை என்னும் அடிப்படையை எல்லாரும் புரிந்துகொள்ள வைத்தீர்கள்.
அது போலவே தமிழிசையில் மதம் என்பதில்லை, இசுலாமியர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதைத் தெளிவாகக் கூறினீர்கள்.

யாழ் பற்றிய செய்திகள் மிகவும் பயனுள்ளவை. அன்னபூர்ணா தேவி வாசித்த சுர்பகர் தான் பேரியாழ் என்று நேற்று நண்பர் யுவன் சந்திரசேகரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

மொத்தத்தில்
மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

அன்பும் நன்றியும்
அய்யா

எழுத்தாளர் சமயவேல்
Sep 14, 2020


அமெரிக்க தமிழ் வானொலியின் கலை இலக்கிய நேரத்தில் அமிர்தவர்சனி பண்ணில் அமைந்துள்ள பாடல்கள் பற்றி இசைப்பேரரசு நா. மம்மது அய்யா அவர்கள் எல்லோரும் தெரிந்து கொள்கிற மாதிரி நயம்பட கூறினார்கள். அய்யா அவர்கள் அடக்கத்தின் மொத்த உருவம். நிறை குடம், அவரிடம் எவ்வளவு இசைச் செய்திகள் அடங்கி உள்ளன. மொத்தத்தில் அவர் ஒரு இசைக்கடல் (கடலின் ஆழத்தை அறிய முடியாது )

கரிசல் கருணாநிதி அய்யா அவர்கள் இயற்கை வளம் பற்றிய கருத்துக்கள் அடங்கிய பாடலை அருமையாகப் பாடினார்கள்.

தண்டபாணி அய்யா அவர்கள் இசைநயத்துடன் அருமையாக பாடினார்கள். சிவப்பிரகாசம் அய்யா அவர்கள் மன மகிழ்வுடன் பாடினார்கள். புது வாழ்வு தொடங்க உள்ள சிவப்பிரகாசம் அய்யா அவர்களுக்கு அமெரிக்க தமிழ் வானொலி நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இசைக்கு மொழி ஒரு தடையில்லை என்ற கூற்றுக்கு ஒப்ப இசைக்குயில் ஜோதி அவர்கள் மலையாளப்பாடலை நெகிழ்வுடன் அருமையாகப் பாடினார்கள்.

நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்தமைக்கு நன்றி.

ராஜ பார்ட் ராஜா அவர்கள் சிலப்பதிகாரம், திருக்குறள் பாடல்களை சுவை பட பாடினார்கள்.
மீண்டும் மீண்டும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சி நடத்தும் ஆறு அய்யா, கனகலட்சுமி அம்மா அவர்களுக்கு நெஞ்சார வாழ்த்துக்கள்.

நெறியாளர் குமரகுருபரன் தொகுத்து வழங்குவதில் சிகரம் தொடுகிறார்.
இலக்கியத்தில் அன்று தமிழ் ஆர்வலர்கள் கூற்று பலிக்கும் என்ற கருத்திற்கு ஒப்ப அமிர்தவர்சனி ராகம் பாடி முடித்தவுடன் மழை பெய்யும் என்று நெறியாளர் கூறியது போன்று எங்களது ஊரில் (ராயகிரி, தென்காசி மாவட்டம் )மழை பெய்தது.

தமிழ் இசை நிகழ்ச்சி நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே போகிறது. ஏற்பட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி !நன்றி !!

K. T. C. குருசாமி
Sattur, Tamilnadu.
Sep 13, 2020


அமெரிக்க தமிழ் வானொலியின் கலை இலக்கிய நேரத்தில் பண்ணிசை வளர்ச்சியில் இன்று சங்கராபரணத்தின் சேய்ப்பண் ஹம்சத்வணி பற்றிய இசைச் செய்திகளை தமிழிசை ஆய்வாளர் திரு மம்மது ஐயா அவர்கள் சுவைபட விளக்கினார்கள்.

மேலும் இசக்கியப்பன் ஐயா அவர்கள், ராஜா அவர்கள் வாயிலாக பல செய்திகளை சொல்ல வைத்து கேட்டு மகிழ்ந்தார்கள், எங்களையும் மகிழ வைத்தார்கள்.

தோழியர் கல்பனா அவர்கள் துவக்கத்திலேயே நன்கு பாடி சொக்க வைத்தார்கள்.

திரு இசக்கியப்பன் ஐயா அவர்கள் புல்லாங்குழலில் பாடி பூரிக்க வைத்தார்கள். மேலும் அவரது மாணவரையும் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார்கள்.

தோழியர் சுகி சிவா அவர்கள் அவரது புதல்வியாரோடு சேர்ந்து இனிமையாக பாடினார்கள்.

ஜோதியின் குரல் வளம் அருமை.

இறுதியில் ராஜபார்ட் ராஜா அவர்கள் தியாகராஜா பாகவதர் தொட்டு இளையராஜா வரை ஹம்சத்வனி ராகத்தில் பாடிய பாடல்களை புட்டு புட்டு வைத்தார்கள்.
ராஜா அவர்கள் தனியாக ஒரு நாள் நிகழ்வு நடத்தினாலும் நன்றாக இருக்கும். ராஜா
ராஜாதான் அவ்வளவு அருமை.

தொகுப்பாளர் குமரகுருபரன் அவர்கள் பல அரிய தொகுப்புக்களை மம்மது ஐயா அவர்களிடம் கேட்டு வாங்கி நம்மிடம் தெரியப்படுத்தினார்கள்.

நிகழ்வு தோறும் ஆறு ஐயாவையும் கனகலட்சுமி அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது.

மொத்தத்தில் நிகழ்ச்சிகள் அருமை அருமை என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

KTC குருசாமி
சாத்தூர்
Sep 05, 2020


அரும்பாலை (எ )சங்கராபரணத்தின் சேய்ப் பண்ணாகிய அடானா பற்றிய அறிய இசைச்செய்திகளை தமிழ் இசை ஆய்வாளர் திரு. நா. மம்மது அய்யா எல்லோரும் புரியும், தெரியாத பல செய்திகளைக் கூறினார்கள். அய்யா இசைக்கு கிடைத்தது தமிழகத்தின் பெரும் பாக்கியம். சிவப்பிரகாசம் அய்யா, தண்டபாணி அய்யா, கரிசல் கருணாநிதி அய்யா, திருஞானசம்பந்தர் அய்யா, ராஜபார்ட் ராஜா முகமது அய்யா, சகோதரி ஜோதி ஆகியோர் அருமையாக, இனிமை யாக, எல்லோரும் ரசிக்கும் வண்ணம் பாடினார்கள். இன்றைய நிகழ்வுக்கு ஜோதியின் வந்து பாடியது முத்தாய்ப்பாக இருந்தது. தொகுப்பாளர் குமரகுருபரன் தன் குரல் வளத்தை நிகழ்சிக்கு நிகழ்ச்சி மெருகேற்றிக் கொண்டே போகிறார். மிகவும் அருமை. அதை ஆறு அய்யா பாராட்டியதே பெருமை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தோழியர் கனகலக்ஷிமி அவர்களின் குரலை கேட்டது சந்தோசம்.நிகழ்ச்சி சரியாக 7.00மணிக்கு தொடங்கி 9.00மணிக்கு முடித்தது சிறப்பு. நல்ல நிகழ்வை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க தமிழ் வானொலிக்கு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி! நன்றி !!

K. T. C. குருசாமி,
சாத்தூர்,
Aug 29, 2020


ஐயா!!! அமெரிக்க வானொளி நிகழ்வு வழக்கம்போல் அருமையாக இருந்தது. குறிப்பாக கிறிஷ்டோபர் ஐயாவின் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐
‘வானொளி’ புதுச் சொல்லாக்கமாய்த் தெரிகிறது…. நடத்துவது அமெரிக்கத் தமிழ் வானொலி என்றாலும் பார்க்கவும் முடியும் என்பதனால் வானொலி + காணொளி = வானொளி ஆகியதோ எனத் தோன்றுகிறது

ஆசுத்திரேலியாவிலிருந்து திரு.சுரேசு.
Aug 19, 2020


அமெரிக்க தமிழ் வானொலியின் கலை இலக்கிய நேரத்தில் பண்ணிசை வளர்ச்சி நிகழ்ச்சியில் தமிழ் இசை ஆய்வாளர் நா. மம்மது அய்யா அவர்கள் அன்றைய விளரிப்பலைதான் இன்றைய தோடி என்று எல்லோரும் புரியும் வண்ணம் அருமையாக கூறினார்கள்.பேராசிரியர் கிரிஷ்டோபர் ஷெர்வூட் அவர்கள் மேலை இசையுடன் உள்ள தொடர்பு பற்றி அழகுற அருமையாக கூறினார்கள். இவர்களின் விளக்கம் இன்றுஎன்போன்ற இசை அறியாதவரும் அறியும் வண்ணம் இருந்தது. சிவப்பிரகாசம் அய்யா, தண்டபாணி அய்யா, தோழியர் கல்பனா ஆகியோர் அருமையாக பாடினார்கள். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்களிசை கலைஞர் கருணாநிதி அவர்கள், அவரது மாணாக்கர் எழுதிய அருமையான, அன்பான பாடலை அதாவது அம்மாவை நினைத்து எல்லோரையும் அழ வைத்து அன்புருக பாடினார்கள். மொத்தத்தில் எல்லாமே அருமை !அருமை !!.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் குமரகுருபரன் குரல் அருமை, நன்கு தொகுத்து வழங்கினார். இடை இடையே பேரா. மம்மது அய்யா அவர்களிடம் இசையில் ஏற்படுகிற அய்யங்களை நாங்களும் புரியும் வண்ணம் பேட்டி கண்டது அருமை.நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடித்தது வளர்ச்சியை காட்டுகிறது. மொத்தத்தில் நிகழ்ச்சி அருமையோ அருமை.!

K. T. C. Gurusamy,
சாத்தூர்,
Aug 16, 2020


Leave a Reply