வாழ்க்கையில் வெற்றிக்கு வள்ளுவர் காட்டும் வழி By Dr. Prabhakaran -ATR Thirukkural Sinthanaikal

ஒருவன் தன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று கருதினால், ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று விரும்ப வேண்டும். அது அவனுடைய இலட்சியம் அல்லது கனவு. அவன் அந்த இலட்சியத்தை அடைந்தால் – அவனுடைய கனவு நனவானால் – அவன் வெற்றி அடைந்தவனாகக் கருதப்படுவான். ஒருவனுடைய இலட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு
அவனுடைய வெற்றியும் உயர்ந்ததாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவன் தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். செய்ய வேண்டிய செயல்களைத் தீர்மானித்த பிறகு, அந்தச் செயல்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். திட்டமிடும்பொழுது, பொருள், கருவி, செயல், காலம்,
இடம் ஆகிய ஐந்தையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். திட்டமிட்ட பிறகு, விடாமுயற்சியோடு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்தும்பொழுது, இடையூறுகள் வரலாம். அந்த இடையூறுகளைக் கண்டு மனம்
தளராமல் உழைக்க வேண்டும். உயர்ந்த இலட்சியம், இலட்சியத்தை அடைவதற்கான செயல்களைப் பற்றிய தெளிந்த சிந்தனை, சரியான திட்டம், விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு ஆகியவை அனைத்தும் இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

If one wants to succeed in one’s life, one must want to achieve something. What he
wants to achieve is his dream or vision. If his dream comes true, then he will be
considered to have completed his vision. Valluvar says that the higher one’s vision, the
higher will be one’s success. One must decide what actions he must take to achieve his
vision. After determining what actions to take, he needs to plan how to do those actions.
When planning, he should consider the resources, tools, action, time, and space into
consideration. Once the planning process is complete, he should diligently implement
the plan. When implementing projects, interruptions can occur. One must work tirelessly
to win over those obstacles. If one has a lofty vision, clear thinking about actions to
achieve the vision, the right plan, diligent hard work, then one’s chances of success are
very high.
#வெற்றி
#கனவு #செயல்கள்
#திட்டம்
#செயல்படுத்துதல்
#இடுக்கண்
#Success
#dream
#steps
#plan
#execution
#difficulties
American Tamil Media, ATR Thirukkural Sinthanaikal uploaded on Apr 09, 2021

Support this podcast: https://anchor.fm/americantamilradio/support

Source link

Related posts

Leave a Comment