கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான சிறுவியாபாரிகள், பொதுமக்கள்

கடலூர் துறைமுகத்தில் மீன்களை வாங்க ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர்.

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகள் முடிவடைந்ததால், மீன்களை வாங்குவதற்காக துறைமுகத்தில் கூட்டம் அலைமோதியது. கடலூர் மட்டுமல்லாது, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மீன்களை வாங்கிச் சென்றனர். வஞ்சிரம், காரை, நெத்திலி என வகை வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால், வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனைப்படிக்க…தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – கவலையில் வாகன ஓட்டிகள் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நன்றி

Related posts

Leave a Comment