அல்லு அர்ஜுன் ஆட்டம் இன்று ஆரம்பம் Shooting starts for Samantha’s song in Allu Arjun’s Pushpa – News18 Tamil

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா – தி ரைஸ் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று அதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது.

சமந்தா முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார். நாயகி மையப் படங்களிலும் அவ்வப்போது நடிக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாகவிருக்கும் சாகுந்தலம் படம்கூட நாயகி மையப் படம்தான். தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்குப் பிறகு சமந்தாவின் ஸ்டார் வேல்யூ வட இந்தியாவிலும் எகிறியது. இந்திப் படங்கள், வெப் தொடர்களில் விரைவில் நடிக்கவிருக்கிறார்.

சமந்தா இதுவரை ஒரு பாடலுக்கு ஆடியதில்லை. நயன்தாரா, தமன்னா, ஸ்ருதிஹாசன் என முன்னணி நடிகைகள் அனைவரும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். முதல்முறையாக சமந்தா அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா – தி ரைஸ் படத்தில் ஆடுகிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இந்தியின் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைக்கிறார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் போடப்பட்ட பிரத்யேகமான அரங்கில் இந்தப் பாடலை இயக்குனர் சுகுமார் படமாக்கி வருகிறார்.

புஷ்பா படத்தின் ஹைலைட்களில் இந்தப் பாட்டும், நடனமும் முக்கியமானதாக இருக்கும். டிசம்பர் 17-ம் தேதி புஷ்பா – தி ரைஸ் திரைக்கு வருகிறது. தமிழிலும் அதே தேதியில் படத்தை வெளியிடுகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

நன்றி

Related posts

Leave a Comment