சதீஷ் படத்துக்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் படம் நாய் சேகர். இதில் அவரது நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுகிறார்.

நாய் சேகர் என்றதும் தலைநகரம் படத்தில் வரும் வடிவேலின் கதாபாத்திரம்தான் தமிழர்களுக்கு நினைவுவரும். இதே பெயரில் வடிவேலுவை நாயகனாக்கி ஒரு படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், அவர்களை முந்திக் கொண்டு நாய் சேகர் படத்தை அறிவித்தது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்.

நாயகனாக சதீஷும், நாயகியாக பவித்ரா லக்ஷ்மியும் நடிப்பதாகவும், கிஷோர் ராஜ்குமார் படத்தை இயக்குவதாகவும் அறிவித்ததோடு பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டனர். இதன் காரணமாக வடிவேலு படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பெயர் வைக்க வேண்டியதாயிற்று.

சதீஷ் நடிக்கும் நாய் சேகருக்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதுகிறார். விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களிலும் சிவகார்த்திகேயன் தலா ஒரு பாடல் எழுதியிருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது சதீஷ் படத்துக்கும் எழுதுகிறார். இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தத் தகவலை சதீஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Sivakarthikeyan pens a song for Sathish Naai sekar movie, sivakarthikeyan, sivakarthikeyan songs, சிவகார்த்திகேயன், நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் படங்கள், sivakarthikeyan lyrics, sivakarthikeyan sathish, sathish movies, sathish comedy, sathish naai sekar, சதீஷ், நடிகர் சதீஷ், சதீஷ் நாய் சேகர், சதீஷ் காமெடி

தனுஷை போல் நடிக்க ஆரம்பித்து, படங்கள் தயாரித்து, பாடல்கள் பாடி, இப்போது பாடலாசிரியரும் ஆகிவிட்டார் சிவகார்த்திகேயன். தேசிய விருதும் வாங்கி, ஒரு ஹாலிவுட் படமும், இரண்டு இந்திப் படங்களும் நடித்தால் தனுஷுடன் சமன் ஆகிவிடுவார் சிவா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

நன்றி

Related posts

Leave a Comment