பள்ளியில் துப்பாக்கிச்சூடு | Dinamalar

ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப்:அமெரிக்காவில், பள்ளி ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்; எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.இந்நிலையில், இங்குள்ள மிச்சிகன் மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது.
மாகாணத்தின் ஆக்ஸ்போர்டு டவுன்ஷிப் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 15 வயது மாணவர் ஒருவர், பள்ளிக்குள் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்.இதில், 17 வயதுக்கு உட்பட்ட மூன்று மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் படுகாயம்அடைந்தனர்.
இதில் 14 வயது மாணவி ஒருவருக்கு, ‘வென்டிலேட்டர்’ உதவியுடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்ட நடத்திய மாணவரை மடக்கிப் பிடித்து, போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

நன்றி

Related posts

Leave a Comment