பீதியை கிளப்ப வேண்டாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்| Dinamalar

ஜோகனஸ்பர்க்,:’தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும், ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்துவிட முடியாது’ என, தொற்று நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாக கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது. இதற்கு, ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ், இப்போது வரை 14நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பல நாடுகள், தென் ஆப்ரிக்கா செல்ல தங்கள் நாட்டினருக்கு தடை விதித்துள்ளன. தென் ஆப்ரிக்காவில்இருந்து பயணியர் வரவும் அவை தடை விதித்துள்ளன.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சலிம் அப்துகரிமன் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுத்து விட முடியாது. வரும் நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவலின் வேகம், பல நாடுகளில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது தான் ஒரே வழி. மக்களிடம் பீதி ஏற்படுத்துவதை, ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களிலும், யாரும் வதந்தி பரப்பக் கூடாது. இதற்கு முன், நாம் இரண்டு கொரோனா பரவல்களை சந்தித்துஉள்ளோம். எந்த வைரசும், தொற்று நோயும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு பரவத்தான் செய்யும். எனவே, நாம் வைரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று சவாலை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

நன்றி

Related posts

Leave a Comment