India Bans Wheat Export With Immediate Effect to Manage Rising Inflation, கிடுகிடுவென உயரும் கோதுமை விலை

நாட்டில் கோதுமை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கோதுமை விலை உயரத்தொடங்கியது. எனவே, அவரின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உள்நாட்டில் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்யப்ப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு சந்தையில் விலையை கட்டுக்குள் வைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் ஏற்றுமதிக்கான மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அனுமதியுடன் தேவைக்கேற்ப ஏற்றுமதி செய்துகொள்ளலாம்.

இந்த திடீர் விலை உயர்வால் இந்தியா, அதன் அண்டை நாடுகள் மற்றும் சில பின்தங்கிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது இந்திய அரசின் கடமை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்க மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அன்மையில் அனுப்பியிருந்தது. 2022-23 ஆண்டு காலத்தில் நாட்டின் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக இந்த ஏற்றுமதி தடை உத்தரவை பிறப்பிக்கும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 100 கிலோ ஆட்டாவின் விலை ரூ.2,400க்கு விற்பனையாகி வருகிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் இத்தகைய விலை உயர்வு தற்போது தான் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Rate: ₹ 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கத்தின் விலை… இன்று(14 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவதைத்து வருவதால், மக்களின் சுமையை உணர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

Related posts

Leave a Comment