Announcement from American Tamil Media Community Partners
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகமும், நமது தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டமும் இணைந்து அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தத் திட்டமிடுள்ளோம்.
மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதலாம். இந்தப் போட்டியில் சிறப்பான கட்டுரைகளை எழுதும் மாணவர்களுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதற் பரிசு – $1,000.00; இரண்டாம் பரிசு – $500.00; மூன்றாம் பரிசு – $250.00. தமிழில் எழுதப்பட்ட சிறந்த கட்டுரை பரிசு பெறாவிட்டால், அந்தக் கட்டுரையை எழுதிய மாணவருக்கு சிறப்புப் பரிசு ($250.00) வழங்கப்படும். இந்தக் கட்டுரைப் போட்டிகான விதிமுறைகளை https://tsgwdc.org/events/kuralessay என்ற இணைய தளத்தில் காணலாம்.
நன்றியுடன்,
பிரபாகரன்
தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம்